சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உக்ரைன் பிரஜைகள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ரஸ்யப் படையினர் உக்ரைனின் கிவ் நகரில் மேற்கொண்ட தாக்குதல்களை கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர் மருத்துவமனையொன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் 30 சிறுவர்கள் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதலை கண்டிக்கும் வகையில் சுவிஸ் வாழ் உக்ரைன் பிரஜைகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த எதிர்ப்பு போராட்டத்தில் சுமார் 300 பேர் வரையில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்ய ஏவுகணையொன்று நேரடியாக சிறுவர் மருத்துவமனையை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியமைக்கான ஆதாரங்கள் உண்ட என உக்ரைன் பிரஜைகள் தெரிவித்துள்ளனர்.
ரஸ்ய ஜனாதிபதி புட்டின் ஓர் குற்றவாளி எனவும், சிறுவர் கொலையாளி எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.