சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக நாட்டில் நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக இந்த அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக சுவிட்சர்லாந்தின் ரிக்கினோ கான்டனில் அண்மைய நாட்களில் பலத்த காற்று, கடும் மழை மற்றும் மண் சரிவு போன்ற காலநிலையை அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன.
இதனால் குறுகிய கால அடிப்படையிலும் நடுத்தர கால அடிப்படையில் சுற்றுலா பயணிகளின் வருகை பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் அரையாண்டு பகுதியில் சுற்றுலா பயணத்துறைக்கு பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கடந்த மார்ச் மாதம் முதல் சீறற்ற காலநிலை சுற்றுலா பயண துறையை வெகுவாக பாதித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோதார்ட் சுரங்கப்பாதை மூடப்பட்டமை உள்ளிட்ட ஏனைய காரணிகளினாலும் சுற்றுலா பயணத்துறை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.