சுவிட்சர்லாந்தின் கட்டுமான தளமொன்றில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சாரக்கட்டு அல்லது கட்டுமான கட்டமைப்பு ஒன்று (scaffolding) இடிந்து விழுந்ததில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மேலும் சிலர் புதையுண்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான மீட்பு பணியாளர்களும் தீயணைப்பு பனையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வாட் கன்டனின் லாவுசானின் புறநகர்ப் பகுதியான பிரில்லி மேல்லே (Prilly-Malley) நகரில் இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
19 மாடி கட்டிடம் ஒன்றிற்கான சாரக்கட்ட்டு கட்டமைப்பு இவ்வாறு இடிந்து விழுந்து உள்ளது.
விபத்தில் மேலும் பலர் காயமடைந்து இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.