சுவிட்சர்லாந்தில் சூரிய சக்தி மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் மொத்த மொத்த மின்சார தேவையில் 10 வீதம் சூரிய சக்தியினால் கிடைக்க பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இது Beznau அணுமின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி அளவைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் சூரிய சக்தி மின்சார உற்பத்தியின் அளவு அதிகரித்து வருகின்றது.
கடந்த ஆண்டில் மொத்த மின்சார தேவையில் எட்டு வீதமான அளவு மின்சாரம் சூரிய சக்தி மூலம் கிடைக்க பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்து புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 2050 ஆம் ஆண்டு அளவில் நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 50% சூரிய சக்தி மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.