சுவிட்சர்லாந்தின் லாவுசானில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
கட்டுமான தளமொன்றில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வோட் கான்டனின் லாவுசானின் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.
இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்திருந்ததுடன் மேலும் நான்கு பேர் சிறு காயங்களுக்கு இலக்காகியிருந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டு என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
படுகாயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
14 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.