சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணங்களை மூன்று மடங்காக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் முன்னணி பல்கலைக்கழகங்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு வெளியிட்டுள்ளன.
தற்போதைய வகுப்பு கட்டணத்தை மும்மடங்காக அதிகரிக்க வேண்டும் என முன்னணி பல்கலைக்கழகங்கள் வாக்களித்துள்ளன.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்ட கற்கை நெறிகளை பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்களின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண வீக்கம் காரணமாக இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு எனினும் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.