சுவிட்சர்லாந்தில் தனி வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனியொரு குடும்பம் வசிக்கக்கூடிய வகையிலான வீடுகளின் விலைகள் இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் இவ்வாறு விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த காலாண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த காலாண்டு பகுதியில் தனி வீடுகளின் விடைகள் 0.6 வீதமாக உயர்வடைந்துள்ளது.
வீட்டு மனை ஆலோசனை நிறுவனம் (Zurich consultancy firm Fahrländer Partner Raumentwicklung) ஒன்று இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் தனி வீடுகளின் விலைகள் 4.7 வீதத்தினால் அதிகரித்துள்ளது.