அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்றாம்ப் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பென்சில்வேனியாவின் பீதெல்பார்க் (Bethel Park) விமான நிலையத்தின் விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
விசேட பாதுகாப்பு காரணிகளுக்காக இவ்வாறு விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சில மணித்தியாலங்களுக்கு இவ்வாறு விமானப் பயணங்கள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து அந்நாட்டு புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
ட்ராம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஓர் கொலை முயற்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 வயதான தோமஸ் மேத்யூ குரூப்ஸ் என்ற இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக புலானய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரம் ஒன்றில் பங்கேற்று இருந்த வேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலின் போது ட்ரம்ப் மயிர் இழையில் உயிர் தப்பி இருந்தார்.
அவரது வலது காது பகுதியில் சிறு காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்திருந்தனர் மேலும் தாக்குதண்டரையை மேற்கொண்ட இளைஞரை அமெரிக்க ரகசிய புலனாய்வு பிரிவினர் சுட்டுக் கொண்டுள்ளனர்.