அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வேறுபாடுகளை தீர்த்துக் கொள்வதற்கு வன்முறை தீர்வு அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் குடும்பத்தாருக்கு ட்ரம்பிற்கும் அவரது குடும்பத்தாருக்காகவும் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
தனது வலது காதில் துப்பாக்கி ரவை இலேசாக பட்டது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்ததாக்குதல் சம்பவத்தில் ட்ராம்பின் வலது காதிற்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபரை கொன்றதாக அமெரிக்க ரகசிய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தாக்குதல் சம்பவத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வன்மையாக கண்டித்துள்ளார்.
அரசியலில் வன்முறைகள் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.