அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் வாகனத்தில் வெடிபொருட்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தோமஸ் மெத்திவ் குருக்ஸ் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு ட்ராம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார்.
குருக்ஸின் வாகனத்தில் இவ்வாறு வெடிபொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தேக நபர் தொடர்பில் சனிக்கிழமை இரவிலேயே பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் பற்றி பொதுமக்களும் தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.