அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.
இந்த கொலை முயற்சி அதிர்ச்சி அளிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ட்ராம்ப் பாதுகாப்பாக இருப்பது அறிந்து கொண்டது ஆறுதலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் இவ்வாறான வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலகின் பல நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியையும் கரிசனையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டவர்களும் தங்களது கவலையையும் கரிசனையையும் வெளியிட்டுள்ளனர்.