பிரான்சில் இடம் பெற்ற விமான விபத்தில் சுவிஸ் பிரஜை உள்ளிட்ட இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் அல்ப் மலைப் பகுதியில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளது.
கடந்த புதன்கிழமை முதல் இந்த விமானம் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2800 மீட்டர் உயரத்தில் இந்த விமானத்தில் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த இடத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் விமானத்தின் விமானி 45 வயதான பிரெஞ்சுப் பிரஜை எனவும், மற்றையவர் 58 வயதான சுவிஸ் பிரஜை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சுவிட்சர்லாந்து பிரஜை ஒரு சுற்றுலா பயணி என தெரிவிக்கப்படுகிறது.
விமான விபத்துக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.