கோடைகால விமான பயணங்களுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என விமான சேவை நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சீரற்ற காலநிலை, பணியாளர் தொடர்பான பிரச்சினைகள் போன்ற காரணிகளினால் இவ்வாறு விமான பயணங்களுக்கு இடையூறு ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய விமான சேவை நிறுவனங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.
சீறற்ற காலநிலை காரணமாக வான் பயண கட்டுப்பாடுகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மில்லியன் கணக்கான பயணிகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பாவில் ஜூலை மாத முதல் வாரத்தில் பயணித்த விமானங்களில் 56 வீதமான விமானங்கள் குறித்த நேரத்தில் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய விமானங்கள் சீரற்ற கால நிலை உள்ளிட்ட காரணிகளினால் உரிய நேரத்திற்கு பயணத்தை தொடங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதத்தில் பயணிகள் சராசரியாக 4.7 நிமிடங்கள் விமான பயண கால தாமதத்தை எதிர் நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பாவில் பணியாளர்களின் பற்றாக்குறையினால் விமான பயணங்கள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 33,671 விமானங்கள் உரிய நேரத்தில் பயணம் செய்யவில்லை எனவும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 5.2 வீத அதிகரிப்பு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.