சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற படகு விபத்து ஒன்றில் 37 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சூரிச் கான்டனின் ரெஹினாயு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் கடந்த வாரத்தில் காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த உயிரிழந்த நபரும் 28 வயதான பெண் ஒருவரும் படகு விபத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரைம் மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் 28வயதான பெண் மீட்கப்பட்டிருந்தார்.
எனினும், குறித்த நபர் காணாமல் போயிருந்த நிலையில் அவரது சடலம் தற்பொழுது மீட்கப்பட்டுள்ளது.