சுவிட்சர்லாந்தில் இன்றைய தினம் பலத்த மழை பெய்யும் எனவும் இடி மின்னல் தாக்கம் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதி நாட்களில் சீரான வானிலை நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு நிலையில் இன்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த சீரற்ற காலநிலை தொடர்பில் அபாய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கம் இந்த அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
சீரற்ற காலநிலை தொடர்பிலான மூன்றாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் கூடுதல் அளவு மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரையில் பலத்த பலத்த மழை மற்றும் இடி மின்னல் தாக்கம் ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் சனிக்கிழமையும் நாட்டின் சில பகுதிகளில் சீறற்ற வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.