அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ராம்ப் மீதான தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம் வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வயோலா ஹம்ஹார்ட் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் சிறுகாயமடைந்த ட்ராம்ப் சிக்கரம் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியலில் வன்முறைகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அமெரிக்கப் பிரஜைகள் அனைவருக்காகும் சுவிட்சர்லாந்து மக்கள் சார்பில் தமது ஆதரவினை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.