ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பதற்காக தாக்கல் செய்ப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாது, ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக்கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை பரிசீலனை செய்தது.
இந்த மனுவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய விடயங்கள் கிடையாது எனத் தெரிவித்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் நீதிமன்ற செலவுகளுக்காக ஐந்து லட்சம் ரூபாவினை செலுத்துமாறும் குறித்த மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மனுதாரர் அனுர லக்சிறி என்ற ஓர் சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது.