சுவிட்சர்லாந்திற்கும் பிரான்சிக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி பிரான்சின் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி தொடர் ஆரம்பமாக உள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 11-ம் திகதி வரை இந்த விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்திற்கும் பிரான்சிக்கும் இடையிலான எல்லை பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஜெர்மன் உள்துறை அமைச்சர் நான்சி பீஸர் தெரிவித்துள்ளார்.
தற்காலிக அடிப்படையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து அதிகாரிகள் கூட்டாக இணைந்து இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யூரோ கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடரின் போது அறிமுகம் செய்யப்பட்ட விசேட எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.
டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுடனான எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
யூரோக்கின் கால்பந்தாட்ட போட்டி தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.