இந்தியாவில் உள்ளூர் விமானப் பயணங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் முதல் அரையாண்டுப் பகுதியில் இந்தியாவின் உள்ளூர் விமானப் பயணங்களின் எண்ணிக்கை 4.28 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
முதல் ஆறு மாத காலப்பகுதியில் இந்திய உள்ளூர் விமான சேவை நிறுவனங்கள் சுமார் 7.93 கோடி பயணிகளை போக்குவரத்து செய்துள்ளன.
கடந்த 2023ம் ஆண்டில் விமான சேவை நிறுவனங்கள் சுமார் 15.2 கோடி உள்ளூர் விமானப் பயணிகளை போக்குவரத்து செய்துள்ளன.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மூலம் இந்திய விமான சேவை துறையில் சாதக நிலைமை உருவாகியுள்ளது என்பது தெளிவாகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.