காலநிலை மாற்றம் குறித்து சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
காலநிலை மாற்றம் காரணமாக நாளொன்றின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
துருவப் பகுதிகளின் பனிப்பாறைகள் உருகி சமுத்திரங்களில் கலப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் குறைவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சூரிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் மொஸ்டபா கியானி சாவான்டி (Mostafa Kiani Shahvandi) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
காலநிலை மாற்றத்தினால் நாளொன்றின் காலம் 1.33 செக்கன்களினால் நீளமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பூமி மற்றும் நிலவின் சுழற்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றம் காரணமாக நிலவின் சுழற்சி வேகம் 2.40 மில்லி செக்கன்களினால் நீடிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய தாக்கம் வேகமடைந்துள்ளதாக ஆய்வாளர் Shahvandi தெரிவித்துள்ளார்.