சுவிட்சர்லாந்தில் சீரற்ற காலநிலை காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பேசல் மற்றும் ஸ்டார்ஸ்பெர்க் பகுதிகளுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மழை மற்றும் இடி மின்னல் தாக்கம் காரணமாக இவ்வாறு ரயில் பயணம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் மாற்று போக்குவரத்து சாதனங்கள் மூலம் பயணங்களைத் தொடர நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் சில பகுதிகளுக்கு இடி மின்னல் தாக்கம் தொடர்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.