சுவிட்சர்லாந்தில் இரண்டு மலையேறிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
வலாயிஸ் கான்டனில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற.
35 மற்றும் 44 வயதான இரண்டு சுவிட்சர்லாந்து பிரஜைகள் இவ்வாறு விபத்தில் சிக்கி கொல்லப்பட்டுள்ளனர்.
மலையேறிகள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்காத காரணத்தினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது குறித்த இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மரணங்களுக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.