சுவிட்சர்லாந்தில் ஏதிலிக் கோரிக்கையாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூன்மாதம் சுவிட்சர்லாந்தில் ஏதிலிக் கோரிக்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மற்றும் இந்த ஆண்டு மே மாதம் என்பனவற்றுடன் ஒப்பீடு செய்யும் போது ஜூன் மாத ஏதிலிக் கோரிக்கை விண்ணப்பங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.
அதிக எண்ணிக்கையிலான உக்ரைன் ஏதிலிக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் ரஸ்ய போரைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து அரசாங்கம் உக்ரைன் பிரஜைகளுக்கு விசேட எஸ் ஏதிலி பாதுகாப்பு திட்டமொன்றை அறிமுகம் செய்திருந்தது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் இதுவரையில் 66189 உக்ரைன் பிரஜைகளுக்கு ஏதிலி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் மொத்தமாக 1881 பேர் ஏதிலி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்துள்ளனர் எனவும் இது மே மாதத்தை விடவும் குறைவான எண்ணிக்கை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.