இலங்கையில் புதிதாக தேசிய அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இலங்கை தேசிய ஆட்பதிவு திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மாதம் தொடக்கம் இந்த புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஊழல் மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த புதிய அடையாள அட்டை அறிமுகம் செய்யப்படுவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் பனிப்பாளர் நாயகம் பிரதீப் சப்புதந்திரி தெரிவித்துள்ளார்.
இந்த புதிய தேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளங்கள் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மிகவும் பாதுகாப்பான ஓர் அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.