இலங்கை கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வோரின் வசதி கருதி புதிய நடைமுறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம் செய்வதற்காக www.immigration.gov.lk என்ற இணைய தளத்திற்கு பிரவேசித்து முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பதிவு செய்து கொண்டதற்கு அமைய முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டு வழங்குவதற்கு குடியுரிமை குடியகல்வு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.