உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஊசி மருந்து வகைகளை சுவிட்சர்லாந்து மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
சூரிச் பல்கலைக்கழகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
ஊசி மருந்து விலை குறைவாக காணப்படுகின்றமையினால் அதிக அளவான மக்கள் இந்த புதிய எடை குறைப்பு ஊசி மருந்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடா, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளை விடவும் சுவிட்சர்லாந்து மக்கள் அதிக அளவில் இந்த எடை குறைப்பு மருந்தினை பயன்படுத்துவதாக தெரிய தெரிவிக்கப்படுகிறது.
சூரிச் பல்கலைக்கழகத்தின் சட்ட மற்றும் மருத்துவ பேராசிரியர் கேர்ஸ்டின் நோயல் வாக்கிங்கர் (Kerstin Noëlle Vokinger) தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் எடை குறைப்பு தொடர்பான மருந்து பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் இந்த மருந்தை பயன்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய நாடுகளில் முன்னதாகவே இந்த தடுப்பு மருந்து பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் 12000 சுவிஸ் பிராங்குகளுக்கு விற்பனையாகும் மருந்து சுவிஸில் 2000 சுவிஸ் பிராங்குகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.