சுவிட்சர்லாந்தில் உபர்லேண்ட் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின் தொழில்நுட்பவியலாளர் ஒருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
44 வயதான நபரே நபரை இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும் Rueun பகுதியை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இந்த விபத்து இடம்பெற்றது என்பது குறித்து இன்னமும் தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
குறித்த நபர் பாதுகாப்பு கேபிளில் தொங்கிக் கொண்டிருந்த நிலையில் சக பணியாளர்கள் அவரை மீட்டு உள்ளனர்.
இதன்போது குறித்த நபர் சலனமற்றிருந்த நிலையை கண்டுள்ளனர் எனவும் அவருக்கு முதலுதவி வழங்கியபோதிலும் குறித்த நபர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்பதுடன் உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.