சுவிட்சர்லாந்தின் ஜெனிவா விமான நிலையத்தில் புதிய கட்டணம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் ஒலி மாசுறுதல் தொடர்பில் கட்டண அறவீட்டு திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இரவு 10 மணியின் பின்னர் புறப்படும் விமானங்களிடமிருந்து கட்டணம் அறவீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளது விமானங்களுக்கான கட்டணம் 5000 முதல் 20 ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் வரையில் அறவீடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச விமானங்களுக்கான கட்டணம் 10,000 முதல் 40000 சுவிஸ் பிராங்குகளாக அறவீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா விமான நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
காலம் தாழ்த்தி பயணங்களை மேற்கொள்ளும் விமானங்களிடம் இந்த கட்டண அறவீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல் இந்த கட்டண அறவீட்டு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சாத்த அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் போது அப்போது விமானங்களினால் எழுப்பப்படும் ஒலி குறைவடைந்தது என தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து ஜெனிவா நகர மக்கள் விமானத்தில் எழுப்பப்படும் ஒலி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரவு நேரங்களில் பயணங்களை மேற்கொள்வோரிடம் கூடுதல் கட்டணங்கள் அறவீடு செய்யப்படும் சாத்தியங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.