சுவிட்சர்லாந்தில் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக ஓர் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் நபர்கள் இலகுவான முறையில் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வதற்காக இந்த விசேட கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கருவியானது கருணை கொலை அல்லது வதையா இறப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா வதையா இறப்பு செயற்பாட்டாளர் என்பவர் இந்த கருணை கொலை குளிசை முறைமையை அறிமுகம் செய்துள்ளார்.
முதல் தடவையாக சுவிட்சர்லாந்தில் இந்த தற்கொலைக் கூடு (suicide capsule) முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தற்கொலை செய்து கொள்ள அல்லது கருணை கொலை செய்து கொள்வதற்கான இந்த கருவி தொடர்பில் பல்வேறு வாத பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த தற்கொலைக் கூடு எவ்வாறு வேலை செயற்படுகின்றது
இந்த கருவியை எந்த ஒரு இடத்திற்கும் இடம் நகர்த்திச் செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினால் இந்த கேப்ஸ்யூல் போன்ற வடிவத்தைக் கொண்ட கருவிக்குள் நுழைந்து படுத்துக்கொள்ள வேண்டும், உயிரிழக்க விரும்பும் நபர் ஒரு பொத்தனை அடுத்த நாள் இந்த குறிப்பிட்ட கெப்ஸ்சியுலுக்குள் நைட்ரஜன் வாயு வெளிவர தொடங்கும் ஒரு சில சுவாசகங்களின் பின்னர் குறித்த நபர் சுயநினைவற்றுப் போவார், இந்த கருவியினூடாக ஒருவர் சுமார் ஐந்து நிமிடங்களில் மரணத்தை தழுவுவார் என தெரிவிக்கப்படுகிறது.
போதிய அளவு ஒட்சிசன் வாயு இல்லாத காரணத்தினால் இதற்குள் இருப்பவர் உயிரிழப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தற்கொலைக்கூடு ஒன்றை உற்பத்தி செய்வதற்கு சுமார் 15,000 யூரோக்கள் செலவாவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கருவியை பயன்படுத்துவதற்கு விரும்புவார்கள் எரிவாயுவிற்கான அல்லது நைட்ரஜன் வாய்வுக்கான செலவினை மற்றும் செலுத்த வேண்டியுள்ளது.
அதாவது 18 சுவிஸ் பிராங்க்களை செலுத்தி தங்களது உயிரை நிம்மதியான முறையில் மாய்த்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
கருணை கொலை கொள்ள அல்லது வதையா இறப்பினை எய்த விரும்புவார்கள் உளரீதியான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தும் நபரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவை குறித்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த கேள்விகளுக்கு பதில் அளித்ததன் பின்னர் அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கான பொத்தானை அழுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
50 வயதிற்கு மேற்பட்டவர்களே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்பட்ட நோயில் உள்ள வயது குறைந்தவர்களுக்கு இந்த வயதெல்லை விவகாரத்தில் விதிவிலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே மருத்துவ உதவியுடன் தற்கொலை அல்லது கருணை கொலை செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
பல்வேறு சட்ட தேவைகளை பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே இவ்வாறு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
சுயநல நோக்கங்களுக்காக ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தல் மற்றும் அதற்கு உதவுதல் என்பன ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க படக்கூடிய குற்ற செயல்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் இதற்கு தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரை மாய்த்துக் கொள்ளும் போது மருத்துவர் ஒருவரின் உதவிய கட்டாயமாக பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.