தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக அல்ஜீரிய பிரஜை ஒருவருக்கு எதிராக சுவிட்சர்லாந்து நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
51 வயதான அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சுவிட்சர்லர்நது சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த நபருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளது.
தடை செய்யப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஒன்றுடன் இந்த நபர் தொடர்பு பேணியதாகவும், தாக்குதல் முயற்சிகளை திட்டமிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஐரோப்பாவில் குறிப்பாக பிரான்சில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரான்சில் தாக்குதல் முயற்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து குறித்த அல்ஜீரிய பிரஜை சுவிட்சர்லாந்துக்குள் பிரவேசித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் சுவிட்சர்லாந்திலும் தீவிரவாத செயல்பாடுகளை முன்னெடுக்க முயற்சித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.