சுவிட்சர்லாந்தின் கைக்கடிகார ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் அரையாண்டு காலப்பகுதியில் இவ்வாறு கைக்கடிகார ஏற்றுமதியில் வீழ்ச்சியை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதத்திலும் கைக்கடிகார ஏற்றுமதி பின்னடைவை சந்தித்துள்ளது.
குறிப்பாக சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறினும் ஜப்பானுக்கான கைக்கடிகார ஏற்றுமதியில் முன்னேற்றம் பதிவாகியுள்ளது.
மொத்தமாக கடந்த ஜூன் மாதம் கைக்கடிகார ஏற்றுமதி 7.2 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிட்டு அடிப்படையில் வெளியிடப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.