புற்றுநோய் கலன்கள் தொடர்பில் சுவிஸ் விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
சூரிச் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த புதிய ஆய்வினை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய கலன்களின் ஆரம்பப் பாதையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பமாக இந்த ஆய்வு கருதப்படுகின்றது.
ஒருவருக்கு எதிர்காலத்தில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய கலன்களின் உருவாக்கத்தை கண்டுபிடிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புற்றுநோய் ஏற்படும் போது குறித்த கலன்கள் தன்னிச்சையாக செயல்பட தொடங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தோல், பெருங்குடல், சிறுநீர்ப்பை, உணவுக் குழாய் போன்றவற்றில் ஏற்படக்கூடிய புற்றுநோய் கலன்களை முன்கூட்டியே கண்டறிய கூடிய ஓர் முறைமையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும் நோய்க்கான சிகிச்சைகளை அளிப்பதற்கும் இந்த உடல் கலன்களின் மாற்றத்தை கண்டறியக்கூடிய பரிசோதனை உதவும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.