உலகளாவிய ரீதியில் விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்பம் செயலிழந்த காரணத்தினால் இவ்வாறு விமானப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வங்கிகள், தொலைதொடர்பாடல், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாரியளவிலான தகவல் தொழில்நுட்ப ஸ்தம்பித நிலை குறித்து அவுஸ்திரேலிய தேசிய சைபர் பாதுகாப்பு இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் விமானப் போக்கவரத்து பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்டா, அமெரிக்கன் எயார்லைன்ஸ் என்பன விமானப் பயணங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.
எடின்பிரோஹ், ஐரோப்பிய விமான சேவையான ரயன் எயார் போன்ற பல விமான சேவை நிறுவனங்களுக்கும், விமான நிலையங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
தகவல் தொழில்நுட்ப தடை எனக் குறிப்பிடப்பட்ட போதிலும் துல்லியமான காரணங்கள் என்ன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சூரிச் மற்றும் ஜெனீவா விமான நிலையங்களின் விமானப் பயணங்கள் முன்னெச்சரிக்கை அடிப்படையில் 30 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.