தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுவிட்சர்லாந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு விமான சேவைகள், விமான நிலையங்கள், வர்த்கத நிறுவனகள் என பல்வேறு துறைகளை மோசமாக பாதித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சூரிச் விமான நிலையத்தின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் கணனி கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ஏனைய நாடுகளின் விமான போக்குவரத்து கட்டுபாட்டு வலைமைப்புக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே துரதிஸ்டவசமாக சில விமானப் பயணங்களை ரத்து செய்யப்படவோ அல்லது காலம் தாழ்த்தவோ நேரிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சூரிச்சிலிருந்து பேர்ளின் புறப்படவிருந்த இரண்டு விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படுமா என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சுவிட்சர்லாந்தின் தபால் சேவை, தொலைதொடர்பு சேவை போன்றனவற்றுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.