ஶ்ரீலங்கன் விமான சேவை வழமைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல்வேறு நிறுவனங்களின் சேவைகள் ஸதம்பிதம் அடைந்திருந்தது.
ஸ்தம்பித்திருந்த, ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் இணைய வழி பதிவு சேவை (internet booking services ) வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாம் தரப்பு சேவைகளின் முடக்கம் காரணமாக ஶ்ரீலங்கன் விமான சேவையின் இணைய வழி பதிவுகளுக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.
இணைய வழியில் பதிவுகளை மேற்கொள்ளும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தற்பொழுது இந்த சேவை வழமைக்குத் திரும்பியதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.