சுவிட்சர்லாந்தில் கணவனின் எதிரிலேயே ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
சுவிட்ஸ்சர்லாந்தின் வலாயிஸ் கான்டனின் Villeneuve மற்றும் Roche வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 69 வயதான பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணும் அவரது கணவரும் ரயில் பாதையை கடக்க முயற்சித்த போது இந்த துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இடத்தில் அதிகாரப்பூர்வமான ரயில் கடவை எதுவும் இருக்கவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.
Villeneuve வந்த ரயில் குறித்த பெண் மீது மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசர மாக ரயிலை நிறுத்த முயற்சிக்கப்பட்டபோதிலும் குறித்த பெண்மீது ரயில் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வறெனினும் இந்த சம்பவத்தில் குறித்த பெண்ணின் கணவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.