சர்வதேச ரீதியில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தொடர்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
கிரவுட் ஸ்ட்ரைக் என்னும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளது.
கிரவுட் ஸ்ட்ரைக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோர்ஜ் கூர்ட்ஸ் (George Kurtz) வாடிக்கையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
மென்பொருள் ஒன்றை இற்றைப் படுத்துவதில் ஏற்பட்ட பாதிப்பே இவ்வாறு உலக அளவில் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு பாதிக்கப்பட்டமைக்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கோளாறு துரித கதையில் அடையாளம் கண்டு உடனடியாக அதற்கு தீர்வு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெகுவிரைவில் இணையத்தை மீள இயங்கச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
வங்கிகள் விமான நிலையங்கள் விமான சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தன.
இந்த கோளாறு சைபர் தாக்குதல் அல்ல என கிரவுட் ஸ்ட்ரைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.