பங்களாதேஷில் நாடு முழுவதிலும் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல இடங்களில் மாணவர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போராட்டங்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளதகாவும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சட்டம் ஒழுங்கையின் நிலைநாட்டும் நோக்கில் ராணுவத்தினர் வீதிகளில் கடமையில் அமர்த்தப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சமூக ஊடகப் பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் அலுவலகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்தப் போராட்டங்கள் காரணமாக இதுவரையில் 67 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போராட்டம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.