சுவிட்சர்லநர்தில் இளம் தலைறமுறையினர் கடும்போக்குவாத கொள்கைகளை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக 15 முதல் 25 வயது வரையிலான சுவிட்சர்லாந்து இளைஞர் யுவதிகள் மத்தியில் கடும் போக்குவாத சிந்தனைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சூரிச் பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம் மற்றும் ப்ரைபோர்க் பல்கலைக்கழகம் என்பன கூட்டாக இணைந்து இந்த கருத்துக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகள் யூத எதிர்ப்பு இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் பாலின எதிர்ப்பு போன்ற கொள்கைகளை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கோவிட் பெருந்தொற்று, இஸ்ரேல் ஹமாஸ் போர் போன்ற காரணிகளினால் கடும் போக்குவரத நிலைப்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 1600 இளைஞர் யுதிகளிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.