சுவிட்சர்லாந்து புலனாய்வு பிரிவு தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
புலனாய்வு பிரிவினர் விசாரணைகளின் போது போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சுவிஸ் பொலிசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மத்திய புலனாய்வு பிரிவு தொடர்பிலே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் உளவுப் பணிகள் போன்ற விவகாரங்களில் புலனாய்வு பிரிவினர் உரிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணைகள் தொடர்பிலான தகவல்களை பரிமாறுவதில் சிக்கல் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் சில கான்டன் பொலிஸார் இது தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ளனர்.
போதிய அளவு தகவல்களை புலனாய்வு பிரிவினர் தம்முடன் பரிமாறிக் கொள்ள தவறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
பயங்கரவாத வன்முறை சம்பவங்கள் உள்ளிட்டன தொடர்பிலான விசாரணைகளுக்கு இவ்வாறான தகவல் பரிமாற்றம் மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பொலிஸாரின் குற்றச்சாட்டை புலனாய்வு பிரிவினர் நிராகரித்துள்ளனர்.
தேவையான அளவு தகவல்கள் பரிமாறி வருவதாகவும் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.