அமெரிக்காவின் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹரிஷ் ஹரிசின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
மேலும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஹரிசை முன்மொழிவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் கமலா ஹரிஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பதவிக்கு இன்னமும் அதிகாரப்பூர்வமான முறையில் கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் எண்ணிக்கையிலான செனட்டர்கள் கமலா ஹரிஸ் தேர்தலில் போட்டியிடுவதனை அங்கீகரித்துள்ளனர்.
கறுப்பின செனட்டர்கள் பலர் குறிப்பாக பெண் அரசியல்வாதிகள் கமலா ஹரிஸ் தேர்தலில் போட்டியிடுவதனை ஆதரித்துள்ளனர்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி சிகாகோவில் நடைபெற உள்ள கட்சிப் பேராளர் மாநாட்டில் கமலஹாரிஸ் போட்டியிடுவதற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும், அவ்வாறு வழங்கப்பட பட்சத்தில் புதிய வேட்பாளர் ஒருவர் தேர்தலில் போட்டியிட நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.