சுவிட்சர்லாந்தின் நீர் நிலைகளில் இருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வார இறுதி நாட்களில் இவ்வாறு நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
15 வயது சிறுவன் ஒருவன் நீந்தி கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
சுக் கான்டனில் மேலும் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
Aegeri நதியில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நபர் மீட்கப்பட்டு முதலுதவிகள் வழங்கப்பட்டதாகவும் ஏதேனும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சூக் நதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் தொடர்பிலான மேலதிக விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.