சூரிச் விமான நிலையத்தில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து சூரிச் நோக்கி பயணம் செய்த விமானம் ஒன்று இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
எடெல்வயஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டமைக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
விமானம் தரையிறக்கப்படும்போது விமான நிலையத்தில் அதிக எண்ணிக்கையிலான தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் நேரம் காலை முற்பகல் 10:35 மணிக்கு குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.