4.9 C
Switzerland
Monday, March 24, 2025

ஜோ பைடனின் அறிவிப்பு குறித்து சுவிஸ் ஊடகங்களில்…

Must Read

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தீர்மானம் தொடர்பில் சுவிஸ் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொண்டமை வரவேற்கத்தக்கது என சுவிட்சர்லாந்தின் பிரதான ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காலம் தாழ்த்தியேனும் பைடன் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக சுவிட்சர்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்திருந்தார்.

தமக்கு பதிலாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸை முன்மொழிவதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

கமலா ஹரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

81 வயதான ஜனாதிபதி பைடன் தேர்தலில் போட்டியிடக் கூடாது என சில வாரங்களுக்கு முன்னதாக சுவிட்சர்லாந்தின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான Tribune de Genève ஊடகத்தில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் ஜோ பைடனின் தேர்தல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

வயது முதிர்ந்த ஒருவரினால் அமெரிக்காவை ஆட்சி செய்வது சிரமம் என்ற வகையில் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கமலா ஹரிஸின் திறமைகள் தொடர்பில் தெரியாது எனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் நினைவாற்றல் திறன் குறித்து கேள்வி எழுவதாக விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, தலைமுறைகளுக்கு தேவையான மாற்றத்தை கமலா ஹரிஸினால் வழங்க முடியும் என Neue Zürcher Zeitung (NZZ) ஊடகம் தெரிவித்துள்ளது.

கமலா ஹரிஸினால் டொனால்ட் டிரம்பை தோற்கடிக்க முடியும் என அந்த பத்திரிகையை தெரிவித்துள்ளது.

Tribune de Genève, CH Media group, The Aargauer Zeitung, Tages-Anzeiger , Blick போன்ற ஊடகங்கள் பைடனின் அறிவிப்பு சாதக விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES