அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் பிரதானி கிம்பர்லி செட்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியைத் தொடர்ந்து அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.
ட்ராம்பின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.
கனத்த இதயத்துடன் இந்தத் தீர்மானத்தை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தலைவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் குறைபாடு காணப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
குறிப்பாக ட்ராம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிம்பர்லியின் நீண்ட கால சேவை பாராட்டுக்குரியது எனவும் அதற்காக நன்றி பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவிற்கு புதிய பிராதானி ஒருவர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.