அண்மையில் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு செயலிழந்தமை தொடர்பில் வழக்கு தொடர முடியுமா என சூரிச் விமான நிலையம் கவனம் செலுத்தி வருகின்றது.
சூரிச் விமான நிலைய நிர்வாகம் இவ்வாறு வழக்கு தொடர்வது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு செயலிழந்த காரணத்தினால் ஏற்பட்ட நிதி பாதிப்புகள் தொடர்பில் இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து சூரிச் விமான நிலையத்தின் பேச்சாளர் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட நிதி பாதிப்பு குறித்து சுவிட்சர்லாந்து விமான சேவை நிறுவனமும் தற்பொழுது மதிப்பீடுகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் சுவிட்ச் விமான சேவை நிறுவனம் குறித்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து கவனம் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 132 விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இதனால் சுமார் 10,000 பயணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உலகின் பல நாடுகளில் பல்வேறு நிறுவனங்கள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதிலும் சுமார் 8.5 மில்லியன் சாதனங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.