சுவிட்சர்லாந்தில் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் பதிவு எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளன.
அண்மைய தகவல்களின் பிரகாரம் சுவிட்சர்லாந்தில் பதிவான கார்களில் சுமார் 58 விதமானவை ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
முதல் அரையாண்டு காலப் பகுதியில் இவ்வாறு அதிக அளவிலான ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து மோட்டார் போக்குவரத்து நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.