வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் சுவிட்சர்லாந்து பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து வெளிநாட்டு பிரஜைகளின் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் 813400 சுவிட்சர்லாந்து பிரஜைகள் வெளிநாடுகளில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 1.7 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக எண்ணிக்கையிலான சுவிட்சர்லாந்து பிரஜைகள் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் குடியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சுவிஸ் புலம்பெயர் சமூகத்தின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லர்நது புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.
சுவிட்சர்லாந்து பிரஜைகள் புலம்பெயர்வது மட்டுமன்றி வெளிநாட்டில் பிறக்கும் சுவிஸ் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புலம்பெயர் சமூகத்தில் மூன்றில் இரண்டு பங்கினர் ஐரோப்பாவில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக புலம்பெயர் சமூகத்தில் சுமார் 25 விதமான சுவிஸ் புலம்பெயர் சமூகத்தினர் பிரான்சில் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான சுவிஸ் பிரஜைகள் வாழும் நாடாக போர்த்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆசிய நாடுகளிலும் சுவிட்சர்லாந்து பிரஜைகளில் குடியேற்றம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.