சுவிட்சர்லாந்தின் ரிக்கினோ கான்டனில் அமைந்துள்ள மாகியா நதியில் மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ரிக்கினோ போலீசார் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 18 ஆம் திகதியும் குறித்த பகுதியிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாதம் ஆரம்பத்தில் ரிக்கினோ கான்டனில் கடுமையான மழை, பலத்த காற்று மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன.
இதன் காரணமாக சிலர் காணாமல் போயிருந்தனர்.
குறிப்பாக கான்டனில் சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 5 ஆக காணப்பட்டது.
இவ்வாறான ஒரு பின்னணியில் தற்பொழுது சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரிக்கினோ கான்டனில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது.