உலகின் வலுவான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன் இந்த வரிசையில் சுவிட்சர்லாந்து நான்காம் இடத்தை வகிக்கின்றது.
Henley Passport Index கடவுச்சீட்டு சுட்டியினால் இந்த தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் மிகவும் வலுவான கடவுச்சீட்டுக்கள் குறித்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
கடந்த 19 ஆண்டுகள ஆண்டுகளாக இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகில் 227 நாடுகளை உள்ளடக்கி இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் மிகச்சிறந்த கடவுச்சீட்டை கொண்ட நாடாக சிங்கப்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக ஜப்பான் ஜெர்மனி பிரான்ஸ் இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளன.
தென் கொரியா, ஸ்வீடன், பின்லாந்து, ஒஸ்ட்ரியா அயர்லாந்து, லக்ஸ்ம்பேர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் மூன்றாம் இடத்தை வகிக்கின்றன.
பிரித்தானியா, நியூசிலாந்து, நோர்வே, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் நான்காம் இடத்தை வகிக்கின்றன.
இந்த தரவரிசையில் அவுஸ்ரேலியா போர்த்துகள் ஆகிய நாடுகள் ஐந்தாம் இடத்தை வகிக்கின்றன.
இந்த தரவரிசையில் அமெரிக்கா எட்டாம் இடத்தை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இடத்தை வகிக்கும் சிங்கப்பூர் கடவுச்சீட்டை பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா என்று பயணங்களையும் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.